கால்நடைகளால் ஓமந்தையில் போக்குவரத்து சிக்கல்
வவுனியாவில் ஓமந்தை மதிய கல்லூரிக்கு அருகாமையில் சேமமடு நோக்கிய வீதியில் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
வவுனியாவில் இருந்து சுமார் 12km தொலைவில் அமைந்திருக்கும் ஓமந்தை எனும் இடத்திலிருந்து சேமமடு நோக்கி பயணிக்கும் வீதி 2009 யுத்தத்துக்கு பின்னர் காபெற் வீதியாக தற்போது புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. அவ் வீதிப் பணிகள் தற்போது உள் வீதியில் மாளிகை கிராமத்தை அண்மித்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
காப்பெற் வீதி போடப்பட்ட நிலையிலும் சரியாக போக்குவரத்தில் ஈடுபட முடியாமையால் பல இடையூறுகளை சந்திப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அரசு பல வருடங்களுக்கு பிறகு நிதி ஒதுக்கி வேலைத்திட்டங்களை மேற்கொண்டாலும் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் கிராமவாசிகள் அவதானம் இல்லாமலும், பொறுப்புணர்வு இல்லாமலும் இருப்பது கவலைக்குரியதாக இருக்கின்றது என அங்கு பொக்குவரத்தை மேற்கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுவாக முச்சக்கர வண்டி, கார் போன்ற வாகனங்களில் பயணிப்போர் மாலை 5:00 மணிக்குப் பின் இத்தகைய இடையூறுகளை சந்திப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அவ்வீதிகளுக்கு அருகே குடியிருக்கும் பலரருடைய கால்நடைகள் (மாடுகள்) வீதியிலேயே இரவை கழிப்பது மக்களின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகின்றது.
அங்கு குடியிருக்கும் மக்கள் தமது பகுதியை அழகாகவும், மற்றோருக்கு இடையூறு இல்லாமலும் பாதுகாக்க வேண்டியது அவசியமாகின்றது.