கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 16 கொவிட் மரணங்கள் நேற்றையதினம்(25) பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,346 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 08 பெண்களும் 08 ஆண்களும் உள்ளடங்குவதாக இன்று(26) வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 241 பேர் இன்று பூரண குணமடைந்துள்ளனர். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 576,781 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button