மீண்டும் சகஜ நிலைக்கு மாறும் சுற்றுலாத்துறை
கொரோனா தொற்று இலங்கையில் கடந்த சில மாதங்கள் உச்சநிலையை அடைந்தது. அந்த வகையில் இலங்கை கடந்த சில மாதங்கள் சிவப்பு பட்டியலுக்குள் உள்வாங்கப்பட்டிருந்தது.
பயணத்தடை நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டு கொரோனா தொற்று வேகமாக பரவும் நிலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அரசு அறிவித்ததை தொடர்ந்து இலங்கை கொரோனா கட்டுப்பாடு விடயத்தில் பச்சை வலயத்துக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை இலங்கையில் சடுதியாக விழுக்காடு நிலையை அடைந்திருந்தது. இலங்கையின் பிரதான பொருளாதாரக் கொள்கை சுற்றுலாத் துறையை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டிருந்ததால் நாட்டின் அந்நியச் செலாவணி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
இப்போது நாடு சுமூகமான நிலைக்கு மாறிக்கொண்டிருக்கும் நிலையில் கடந்த ஐப்பசி மாதத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளமையை ஜனாதிபதி செயலகம் உறுதி செய்துள்ளது.