மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ள சஜித் பிரேமதாச!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் தானே களமிறங்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் சிறுபான்மை பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் கலந்துரையாடலின் போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு வலியுத்தியுள்ளார்.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியின் எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டது.
மீண்டுமொரு தேர்தலை எதிர்கொள்ளும் முன் பரந்துபட்ட எதிர்க்கட்சி கூட்டணியொன்றை அமைக்க வேண்டும் என பங்காளி கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்திக்குள் நிலவும் முறுகல்கள் தீர்க்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதன்போது பரந்துபட்ட கூட்டணி அமைக்கப்பட்டாலும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலேயே அமைக்கப்பட வேண்டும் என்று சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
அது மாத்திரமன்றி மீண்டுமொரு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுமாயின் அப்போதும் தாமே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கப் போவதாகவும் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.
இச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், திகாம்பரம், இராதாகிருஷ்ணன், ரவூப் ஹக்கீம், றிஷாட் பதியுதீன் ஆகியோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!
நாட்டின் நெருக்கடி நிறைந்த பொருளாதாரத்திற்குக் குறிப்பிடத்தக்க வருமான இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் இரத்தினக் கற்கள் துறையில் சீனாவின் ஈடுபாடு காரணமாகவே இவ்வாறான நெருக்கடி ஏற்படுவதாகவும் அவை உள்ளூர் வணிகங்களை பாதிப்பதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன், சீன நாட்டினர் இலங்கையிலிருந்து சுமார் 30 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள ரத்தினக் கற்களை ஏற்றுமதி செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இது நாட்டின் விலைமதிப்பற்ற வரி வருவாயை இழக்கச் செய்யும் மற்றும் சட்டப்பூர்வமான, வணிகங்களுக்குக் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கடத்தல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பின் மேல் நீதிமன்றம் ஒரு தசாப்த கால கடத்தல் மற்றும் பணமோசடி நடவடிக்கையுடன் தொடர்புடைய ஒரு சீன தொழிலதிபரின் வங்கிக் கணக்கிலிருந்து 201 மில்லியனுக்கும் அதிகமான தொகையைப் பறிமுதல் செய்ததை வணிக செய்தித்தாள் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.